தன்னை அறியும் ஞானம்

எது ஞானம்?
தெளிவு ஒன்றே ஞானம்...எதைப்பற்றிய தெளிவு?எந்த ஒன்றை அறிய முற்படுகிறோமோ அந்த ஒன்றாகவே கரைந்து விடுதல்.அந்த கரைதல்தான்... அதைப்பற்றிய தெளிவை ஏற்படுத்தும்.அதிலிம் அனுபவ ஞானமே...ஆயிரம் மடங்கு உயர்ந்தது.ஆயிரம் நூல்களை படித்து பெறவேண்டிய ஞானத்தை ஒற்றை வரியில் தூக்கி எறியும் பெரியோர்களை பார்த்திருக்கிறேன். அவை அத்தனையும் அவர்களின் அனுபவங்களின் முதிர்ச்சி.என் செயல் யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே உன் செயலே என்று உணரப்பெற்றேன்...என்ற பட்டினத்து அடிகளின் ஞானம் தன்னை முழுவதுமாக ஒன்றை நம்பி தன்னையே ஒப்படைப்பது.எது அந்த ஒன்று? இறைவன்! இறைவன் உண்டா?அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தபூர்த்தியாகி என்ற தாயுமானவரின் வரிகள் ஞாபகத்திற்கு வரவில்லையா...!அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பான் நமக்குள்ளும் இருப்பானா? நிச்சயமாக...பிறகு ஏன் கோயில்,குளம்... சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்று நான்கு வகையாக பிரித்து வைக்கப்பட்ட மார்க்கத்தின் தொடக்கம் அது.
சரியை என்றால்...?
தன்னை ஒப்புவித்தலின் முதல் படி.
கிரியை என்றால்..?
தன்னை ஒப்புவித்தபின் செய்யவேண்டிய காரியங்கள்!
யோகம் என்றால்?
அறிய முற்படுதல்..!
ஞானம் என்றால்..?
அறிய முற்பட்டதை முழுதுணர்ந்து கொள்ளுதல்!தன்னை யாரிடம் ஒப்புவிப்பது?எதை முழுதுணர்ந்து கொள்ளுவது?இறைவன் என்ற ஒன்றை!இறைவனை ஏன் முழுதுணர்ந்து கொள்ளவேண்டும்?யாரவன்? நமக்குள் பரமாத்மாவாக இருப்பவன் நாம்செய்யும் பாவ புண்ணியங்களை நடு நிலையில் நின்று கண்காணிப்பவன்.ஜீவாத்மாவின் சுக துக்கங்களை தான் சுக துக்கமின்றி கணக்கெழுதி வைப்பவன்.பிற்கு ஏன் ஆலயம்?அது சரியை மார்க்கிகளுக்கு அப்படி என்றால்?ஜீவாத்மா பரமாத்மா என்று அறிந்துணரும் ஞானம் இல்லாதவர்களுக்கா?ஆலயத்தில் உள்ள கடவுள் சிலை வெறும் கல்லா?அல்லது கடவுளா?ஆம் அதில் என்ன சந்தேகம்?அது வெறும் கற்சிலைதான்.அந்த கல்லுக்கா அத்தனை அபிசேகங்கள்,ஆடம்பரங்கள்,அலங்காரங்கள்,பண்டிகைகள்!ஆண்டவனா எனக்கு பண்டிகைகள் வேண்டும் எனக்கேட்டான்?இது தேவையை கருதி நீ செய்யும் காரியம் அது. பண்டிகை போன்ற கேளிக்கைகள் இல்லையெனில் மனிதன் பைத்தியம் ஆகி விடுவான்!அப்போதைக்கு அப்போது மனதிற்க்கு சற்று இயல்பான வாழ்க்கையில் இருந்து விலகி மாறுபட்ட வாழ்க்கை வாழ்ந்து பார்த்துவிட்டு திரும்புவது.
இதெல்லாம் ஏன்?இல்லாத கடவுளுக்கு இருப்பதாக எண்ணி படையல் போடுவது போல அந்த கடவுள் படையலை முழுவதுமாக எடுத்துக்கொண்டால் யார் படையல் போடுவார்கள்?தனக்கென்று வைத்துக்கொண்டு  மிச்சம் மீதியை கடவுளுக்கு போடுபவன் மனிதன்.அப்போது கடவுள் இல்லையா? நமது பரமாத்மாவை அறிய முற்ப்படாத வரை கடவுளை இப்படி வெளியேதான் தேடியாக வேண்டும்!அந்த படித்தரத்தைதான் சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்று பிரித்தார்கள்.வேதாந்தத்தில் கடவுள் எந்த நிலையில் இருக்கிராரோ அந்த நிலையை சித்தாந்தம் நமது உடலில் உள்ள ஆதார தேவதைகளாக கருதுகின்றது.
மூலாதாரத்தை கணபதி என்றும்
சுவாதிஷ்டானத்தை பிரம்மன் என்றும்
மணிபூரகத்தை வாஸ்து என்றும்
அனாகதத்தை ருத்ரன் என்றும்
விசுத்திக்கு மகேஸ்வரன் என்றும்
ஆக்ஞைக்கு சதாசிவம் என்றும்
சகஸ்ரதளத்திற்க்கு பரமாத்மா என்றும் கூறுகிறது சித்தாந்தம்.நமக்குள் இருக்கும் ஆதார கடவுள்களுக்கும் வெளியே ஸ்தூல ரூபமாக ஆலயத்தை அமத்து பார்ப்பதும் ஒரு வகையான ஞானம்தான்.அது உணர்தலின் முதல் படி.இறைவனையா? ஆம்.
மெய்ப்பொருளை கொண்டு நமக்குள் இருக்கும் ஆதார தேவதைகளை நாம் வசப்படுத்தி அந்த இடத்தில் நமது மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை சுரக்க வைத்தலையே நாம் ஞானம் என்கிறோம்.அதற்கு புறத்தோற்றமும் தேவைப்படுகிறது.எடுத்த தேகத்தைநிலை நிருத்தி கொள்வதைப்போல!அப்படியானால் கடவுள் வேறு எங்காவது அண்டம் தாண்டி தூரமாக இல்லையா?அப்படியும் இருக்கலாம் ஆனால் சித்தந்தம் கூறுவது யாதெனில்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம்
வல்லர் பிரானார்க்கு வாய்க்கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காலாமணி வி்ளக்கே..
நமக்குள் இருக்கும் இறைவனை உற்று பார்த்து கண்டறிந்து அதற்க்கு கும்பாபிசேகம் முதல் ஆறு கால பூசைகளையும் செய்வதுதான் மரபு.அங்க நியாசம் கர நியாசம் போல் நமது உடம்பில் உள்ள தேவதையை முதலில் ஆராதித்து ஆவாகனம் செய்து பாவனை செய்தலே முதல் படி அதற்கு பிறகுதான் வெளி வேசமெல்லாம்.பக்தி என்பது வேஷமா?அதிலென்ன சந்தேகம்!பக்தர்கள் முழுவதும் வேடதாரிகளா?ஆம்..பூசாரிகள் உள்பட..கல்லையும் மண்ணையும் சிலை செய்து வைத்துக்கொள்கிறோம் அதற்க்கு நாமே பூசைகளையும் செய்கிறோம் இவற்றில் எது உண்மை.கல்லாய் மண்ணாய் இருப்பதை கடவுள் ஆக்கியது சரியா?உடம்பையே கல் போல் ஆக்கி மண் மேல் தானே கடவுள் ஆக திரிவது சரியா?எது வேண்டும் பின்னதுதான் சரி என்று தோன்றுகிறது.தன்னைத்தான் உணர்வதையே கடவுளை உணர்வதற்கு சமம்.
மனிதம்
மனிதனை மனிதன் அன்பு செய்யப்பட வேண்டும் அன்பே சிவம்..அதுவே தெய்வம் கடவுளின் கதை என்ன?மேடை இல்லை கதைகள் இல்லை கலைஞர்கள் இல்லை ஆனால் ஒரு நாடகம் அரங்கேறிக்கோண்டிருக்கிறது.முடிவான உங்கள் பதில்?எதை உணர நினைத்தாலும் நீயும் அதுவும் உணர்வு ரீதியாக ஒன்றுதல் போல உணரத்தொடங்கி விடு.அதுவே தொடக்கத்தின் முதல் அறிக்குறி எதையும் உணர முற்படுதலே முதல் படி...அதுவே நீ..அதுவே இறை நிலை..அதுவே இறைவனை உணர்வதற்க்கு உகந்த வழி....அதுவே கட..வுள்!எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.மெய்ப்பொருள் என்றால் என்ன?அது பருப்பொருள?ஞானத்தை உணர்ந்து அறியும் மார்க்கமா?இரண்டும்தான்! எப்படி?உள் இருக்கும் இறைவனுக்கு வெளியே அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் இறைவனை உட்கொண்டு நீயும் இறைவனும் வேறு வேறு அல்ல என்பதை சுட்டிகாட்டுதலையே..மெய்ப்பொருள் காண்பதறிவாகும்.மெய்ப்பொருள் என்பது பருப்பொருளா?உயிர்ப்பொருளா?நமக்குள் இருக்கும் உணர்வு நிலைகளா?வேரு எது?அதை ப்பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.இன்னும் வரும்.....

இனிய பக்தி பாடல்கள்,
பக்தி சொற் பொழிவுகள்,
பக்தி திரைப்படங்கள்,
கர்நாடக இசை
போன்றவைகளை
காணொளியில்
கண்டு கேட்டு மகிழுங்கள்

சித்தர் பாடல்கள்

பக்தி பாடல்கள்

ஆன்மீக சொற்பொழிவுகள்

பக்தி திரைப்படங்கள்

கர்நாடக இசை

இணைய வானொலி

அன்பன்
அ இராகவன்


 June 24th, 2011 அன்று புதிய பதிவுடன்
©-2024 - தெய்வீக சித்தமார்க்கம்