சுபகிருது வருட வெண்பா பலன்

சுபகிருது புத்தாண்டு குறித்து சித்தர்பெருமான் இடைக்காடரின் வெண்பா கீழ்க்காணும்படி அமைகிறது.

சுபகிருது தன்னிலே சோழதேசம் பாழ்
அவமாமம் விலைகுறையும் சூன்சாம் சுபமாகும்
நாடெங்கும் மாரிமிகும் நல்லவிளை வுண்டாகும்
கேடெங்கு மில்லையதிற் கேள்

 

கருத்து: `சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே சில பொருள்கள் வீணாகிப் பாழாகும். மண்பாண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை’ என்கிறது இந்த வெண்பா.

 

சுபகிருது - பஞ்சாங்கம்
நவ நாயகர்கள்

சனி - ராஜ்ஜியாதிபதி, நீரஸாதிபதி

புதன் -அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி.

குரு - மந்திரி

சூரியன் - ஸஸ்யாதிபதி

செவ்வாய் - ரஸாதிபதி

சுக்கிரன் - தான்யாதிபதி

பசுநாயக்கர் - பலபத்ரன்

 

பிலவ வருஷத்திய பலன்

பிலவ வருஷத்தின் நவநாயகர்கள்:
ராஜா – செவ்வாய்
மந்திரி – புதன்
அர்க்காதிபதி – செவ்வாய்
மேகாதிபதி – செவ்வாய்
ஸஸ்யாதிபதி – சுக்கிரன்
சேனாதிபதி – செவ்வாய்
இரஸாதிபதி – சூர்யன்
தான்யாதிபதி – குரு
நீரஸாதிபதி – சுக்கிரன்
பசுநாயகர் – கோபாலன்

பிலவ வருஷ வெண்பா:

                                            பிலவத்தில் மாரி கொஞ்சம் பீடை மிகும் ராசர்
                                            சல மிகுதி துன்பம் தரும் நலமில்லை
                                            நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை
                                            பாலுமின்றிச் செய்புவனம் பாழ்
 
இந்த ஆண்டில் மழை அளவு குறைவாக பெய்யும் பீடைகளும் நோய்களும் அதிகரிக்கும் நாட்டில் பொய் பித்தலாட்டம் அதிகரிக்கும் அரசர் கொடுமை புரிவர் மக்கள் படும் துன்பத்திற்கு அளவில்லை நாலுகால் ஜீவனெல்லாம் நாசமாகும் அதனால் பலுக்கு பஞ்சம் ஏற்படும் அபாயம் உண்டு வேளாண் தொழில் புரிய சிரமம் ஏற்படும் புவனமே பாழாகும் வெண்பா இப்படி இருந்தாலும் வருட பிறப்பின் காலங்களில் இராசிகளில் கிரக சஞ்சாரத்தின் படியே பலன்கள் அமையும் எந்த இராசிகளில் என்ன கிரகங்களில் என்ன நட்சத்திரக்கால்களில் கிரகங்கள் அமர்கின்றன என்பதை பொருத்தே பலா பலன்கள் ஏற்படும் பாடலில் உள்ள கருத்துக்கள் ஒரு பலனை சொல்கிறது என்றால் என்ன இராசியில் என்ன கிரகங்கள் அமர்ந்துள்ளார்களோ அதன் படியே பலன்களை கணிக்க வேண்டும்.

இனிய பக்தி பாடல்கள்,
பக்தி சொற் பொழிவுகள்,
பக்தி திரைப்படங்கள்,
கர்நாடக இசை
போன்றவைகளை
காணொளியில்
கண்டு கேட்டு மகிழுங்கள்

சித்தர் பாடல்கள்

பக்தி பாடல்கள்

ஆன்மீக சொற்பொழிவுகள்

பக்தி திரைப்படங்கள்

கர்நாடக இசை

இணைய வானொலி

அன்பன்
அ இராகவன்


 April 29th, 2023 அன்று புதிய பதிவுடன்
©-2024 - தெய்வீக சித்தமார்க்கம்